ஹதீஸ்கள்
#2322
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்துபோய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.3 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடு வதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக, அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، حدثنا هشام، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من امسك كلبا فانه ينقص كل يوم من عمله قيراط، الا كلب حرث او ماشية ". قال ابن سيرين وابو صالح عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم " الا كلب غنم او حرث او صيد ". وقال ابو حازم عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم " كلب صيد او ماشية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2322
- Book Index
- 3
Grades
- -
