ஹதீஸ்கள்
#2309
ஸஹீஹ் அல்-புகாரீ - Representation, Authorization, Business by Proxy
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான், மெதுவாகச் செல்லும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன்; அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, ‘‘யார் அவர்?” என்று கேட்டார்கள். ‘ஜாபிர் பின் அப்தில்லாஹ்’ என்றேன். ‘‘உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். ‘‘நான் மெதுவாகச் செல்லும் ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்” என்று கூறினேன். ‘‘உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ‘‘அதை என்னிடம் கொடுப்பீராக” என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள் அந்த இடத்திலிருந்து எனது ஒட்டகம் அனைவரையும் முந்திச்செல்ல ஆரம்பித்தது. ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக! நான்கு பொற்காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்; மதீனாவரை நீர் இதில் பயணம் செய்யலாம்” என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்). ‘‘எங்கே போகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘சற்று வயதான ஒரு பெண்ணை மணந்திருக்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடி(க் களித்தி)ட அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே!” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘என் தந்தை; பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, சற்று வயதான பெண்ணை மணக்க நாடினேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அது சரிதான்” என்றார்கள். நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக!” என்று நபியவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் எனக்கு நான்கு பொற்காசுகளையும் அதிகமாக ஒரு ‘கீராத்’தையும் கொடுத்தார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வழங்கிய(கீராத்தான)து என்னைவிட்டு (ஒரு போதும்) பிரியாது” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த ஒரு ‘கீராத்’, ஜாபிர் (ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்ததேயில்லை” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்.6 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்டோர் அறிவித்தனர். ஆனால், சிலர் வேறு சிலரைவிடக் கூடுதலாக அறிவித்தனர். அவர்களில் யாரும் முழு ஹதீஸை மொத்தமாக அறிவிக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، حدثنا ابن جريج، عن عطاء بن ابي رباح، وغيره،، يزيد بعضهم على بعض، ولم يبلغه كلهم رجل واحد منهم عن جابر بن عبد الله رضى الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر، فكنت على جمل ثفال، انما هو في اخر القوم، فمر بي النبي صلى الله عليه وسلم فقال " من هذا ". قلت جابر بن عبد الله. قال " ما لك ". قلت اني على جمل ثفال. قال " امعك قضيب ". قلت نعم. قال " اعطنيه ". فاعطيته فضربه فزجره، فكان من ذلك المكان من اول القوم قال " بعنيه ". فقلت بل هو لك يا رسول الله. قال " بعنيه قد اخذته باربعة دنانير، ولك ظهره الى المدينة ". فلما دنونا من المدينة اخذت ارتحل. قال " اين تريد ". قلت تزوجت امراة قد خلا منها. قال " فهلا جارية تلاعبها وتلاعبك ". قلت ان ابي توفي وترك بنات، فاردت ان انكح امراة قد جربت خلا منها. قال " فذلك ". فلما قدمنا المدينة قال " يا بلال اقضه وزده ". فاعطاه اربعة دنانير، وزاده قيراطا. قال جابر لا تفارقني زيادة رسول الله صلى الله عليه وسلم. فلم يكن القيراط يفارق جراب جابر بن عبد الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Representation, Authorization, Business by Proxy
- Hadith Index
- #2309
- Book Index
- 9
Grades
- -
