ஹதீஸ்கள்
#2308
ஸஹீஹ் அல்-புகாரீ - Representation, Authorization, Business by Proxy
மர்வான் பின் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: (ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) ‘ஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி தம்மிடம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உண்மை பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள், அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக்கொண்டுதான் (கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல் பத்து நாட்களாக ‘ஹவாஸின்’ குலத்தாரை எதிர்பார்த்(துக் காத்)திருந்தார்கள் லிஇரண்டில் ஒன்றைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது ‘ஹவாஸின்’ குலத்தாருக்குத் தெளிவானபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம்” எனக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘இறைவாழ்த்துக்குப்பின், உங்களுடைய இந்தச் சகோதரர் கள் மனம் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களில் போர்க் கைதிகளாகப் பிடிபட்டவர்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் இதைச் செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புவர், (இனிவரும் நாட்களில்) முதலாவதாக அல்லாஹ் நமக்குக் கொடுக்கவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும்வரை, அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!)” என்றார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதருக்காக, மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்குச் சம்மதித்தவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களின் தலைவர்கள் (இது பற்றி உங்களிடம் தனியாகக் கலந்து பேசிவிட்டு,) நம்மிடம் உங்கள் முடிவைக் கூறட்டும்!” என்றார்கள். அவ்வாறே மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களின் தலைவர்கள் அவர் களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, (கைதிகளைத் திருப்பி கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Representation, Authorization, Business by Proxy
- Hadith Index
- #2308
- Book Index
- 8
Grades
- -