ஹதீஸ்கள்
#2256
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் கால) மக்கள் ‘ஹபலுல் ஹபலாவுக்காக’ (சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெறவிருக்கும் குட்டிக்காக) ஒட்டகத்தை விற்கவும் வாங்கவும் செய்துவந்தனர். இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.8 அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘ஒட்டகம் தன் வயிற்றிலுள்ள குட்டியை ஈன்றெடுத்தல்’ என இதற்கு விளக்கம் அளித்தார்கள். ™த்தியாயம் லி 36 : விலைக்கோள் உரிமை (™ஷ்ஷுஃப்ஆ)1 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، اخبرنا جويرية، عن نافع، عن عبد الله رضى الله عنه قال كانوا يتبايعون الجزور الى حبل الحبلة، فنهى النبي صلى الله عليه وسلم عنه. فسره نافع ان تنتج الناقة ما في بطنها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2256
- Book Index
- 16
Grades
- -
