ஹதீஸ்கள்
#2254
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
முஹம்மத் பின் அபீ முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை அபூபுர்தா (ரலி), அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடமும் அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடமும் அனுப்பினார்கள். அவ்விருவரிடமும் நான் முன்பண வணிகம் (அஸ்ஸலஃப்) குறித்துக் கேட்டேன். அவ்விருவரும், ‘‘நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்ச் செல்வங்களைப் பெற்றுவந்தோம்; அப்போது எங்களிடம் ‘ஷாம்’ (சிரியா) நாட்டைச் சேர்ந்த ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியர் வருவர்; குறிப்பிட்ட தவணையில் (தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்) கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுக்காக அவர்களிடம் முன்பணம் கொடுப்போம்” என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அவர்களிடம் வேளாண்மை எதுவும் இருந்ததா, இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும், ‘‘நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்ட தில்லை” என்றனர். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا سفيان، عن سليمان الشيباني، عن محمد بن ابي مجالد، قال ارسلني ابو بردة وعبد الله بن شداد الى عبد الرحمن بن ابزى وعبد الله بن ابي اوفى فسالتهما عن السلف،. فقالا كنا نصيب المغانم مع رسول الله صلى الله عليه وسلم فكان ياتينا انباط من انباط الشام فنسلفهم في الحنطة والشعير والزبيب الى اجل مسمى. قال قلت اكان لهم زرع، او لم يكن لهم زرع قالا ما كنا نسالهم عن ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2254
- Book Index
- 15
Grades
- -
