ஹதீஸ்கள்
#2250
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
அபுல்பக்தரீ சயீத் பின் ஃபரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (தவணையில்) விற்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்றார்கள். பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ‘‘மரத்தின் கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடைபோடப்படும் முன்பும் அவற்றை விற்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘மரத்திலுள்ளதை எவ்வாறு எடை போடுவது?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அருகிலிருந்த மற்றொரு மனிதர், ‘‘எடைபோடுவதன் கருத்து (இவ்வளவு எடை இருக்கும் என்று) மதிப்பிடப்படுவதாகும்” என்றார்.5 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن عمرو، عن ابي البختري، سالت ابن عمر رضى الله عنهما عن السلم، في النخل فقال نهى النبي صلى الله عليه وسلم عن بيع الثمر حتى يصلح، ونهى عن الورق بالذهب نساء بناجز. وسالت ابن عباس فقال نهى النبي صلى الله عليه وسلم عن بيع النخل حتى ياكل او يوكل، وحتى يوزن. قلت وما يوزن قال رجل عنده حتى يحرز
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2250
- Book Index
- 11
Grades
- -
