ஹதீஸ்கள்
#2248
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
அபுல்பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரத்திலுள்ள கனிகள் பக்குவ மடையாத வரை அவற்றை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (தவணையில்) விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்கள். பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ‘‘மரத்தி லுள்ள கனிகள் உண்ணப்படும் பக்கு வத்தை அடையாத வரையிலும், எடை போடப்படாத வரையிலும் அவற்றை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن عمرو، عن ابي البختري، قال سالت ابن عمر رضى الله عنهما عن السلم، في النخل فقال نهي عن بيع النخل، حتى يصلح، وعن بيع الورق، نساء بناجز. وسالت ابن عباس عن السلم، في النخل، فقال نهى النبي صلى الله عليه وسلم عن بيع النخل حتى يوكل منه، او ياكل منه، وحتى يوزن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2248
- Book Index
- 10
Grades
- -
