ஹதீஸ்கள்
#2244
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா (ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் அனுப்பி, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?” என்று கேட்கச் சொன்னார்கள். (அவ்வாறே நான் கேட்டபோது) அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்கள், ‘‘கோதுமை, தொலி நீக்கப்பட்ட கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட தவணைக்கு ஷாம் (சிரியா)வாசிகளான ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்துவந்தோம்” என்றார்கள். ‘‘மூலப்பொருள் (விளை நிலம்) யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைப் பற்றி விசாரிக்கமாட்டோம்” என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்பினர். நான் அவர்களிடம் (சென்று) கேட்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்கு விளை நிலம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்பதில்லை” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் ஷாஹீன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை ஆகிய இரண்டு மட்டும் இடம்பெற்றுள்ளன. அப்துல்லாஹ் பின் அல்வலீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஆலிவ்’ எண்ணெய்யும் காணப்படுகிறது. கு(த்)தைபா பின் சயீத் (ரஹ்) அவர் களின் அறிவிப்பில் கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا الشيباني، حدثنا محمد بن ابي المجالد، قال بعثني عبد الله بن شداد وابو بردة الى عبد الله بن ابي اوفى رضى الله عنهما فقالا سله هل كان اصحاب النبي صلى الله عليه وسلم في عهد النبي صلى الله عليه وسلم يسلفون في الحنطة قال عبد الله كنا نسلف نبيط اهل الشام في الحنطة، والشعير، والزيت، في كيل معلوم، الى اجل معلوم. قلت الى من كان اصله عنده قال ما كنا نسالهم عن ذلك. ثم بعثاني الى عبد الرحمن بن ابزى فسالته فقال كان اصحاب النبي صلى الله عليه وسلم يسلفون على عهد النبي صلى الله عليه وسلم ولم نسالهم الهم حرث ام لا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2244
- Book Index
- 7
Grades
- -
