ஹதீஸ்கள்
#2240
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிகுறிப்பிட்ட அளவுக்காகக் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!› என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا صدقة، اخبرنا ابن عيينة، اخبرنا ابن ابي نجيح، عن عبد الله بن كثير، عن ابي المنهال، عن ابن عباس رضى الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة، وهم يسلفون بالتمر السنتين والثلاث، فقال " من اسلف في شىء ففي كيل معلوم ووزن معلوم، الى اجل معلوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2240
- Book Index
- 3
Grades
- -
