ஹதீஸ்கள்
#2224
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களை அல்லாஹ் தனது கருணை ‘லிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! அல்லது சபிப்பானாக என்பதைக் குறிக்க மூலத்தில்) யிகா(த்)தல’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு யிகொல்வானாக!› என்பதே சொற்பொருளாகும்.) இங்கு அதற்கு யிசபிப்பானாக!› என்பதே பொரு ளாகும். குர்ஆனில், ‘‘பொய்யர்கள் சபிக்கப் படுவார்கள்” (51:10) என்பதைக் குறிக்க யிகு(த்)தில’ எனும் சொல்லே மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2224
- Book Index
- 171
Grades
- -