ஹதீஸ்கள்
#2218
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி, அப்த் பின் ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் அடிமை விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் உடைய மகனாவார். என் சகோதரர் (அவரது மரணத்தின்போது) இவன் தம் மகன் என்று என்னிடம் வலி யுறுத்திக் கூறினார். இந்த அடிமை அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்” என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரனே; என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வடிமையிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டபிறகும், அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், ‘‘அப்தே! அவன் உமக்குரியவனே. ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” எனக் கூறினார்கள். பிறகு (தம் துணைவி) சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! இந்த அடிமையிடம் நீ பர்தாவைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்கள் ஒருபோதும் அந்த அடிமையைக் கண்டதில்லை.81 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها انها قالت اختصم سعد بن ابي وقاص وعبد بن زمعة في غلام، فقال سعد هذا يا رسول الله ابن اخي عتبة بن ابي وقاص، عهد الى انه ابنه، انظر الى شبهه. وقال عبد بن زمعة هذا اخي يا رسول الله ولد على فراش ابي من وليدته. فنظر رسول الله صلى الله عليه وسلم الى شبهه، فراى شبها بينا بعتبة، فقال " هو لك يا عبد، الولد للفراش وللعاهر الحجر واحتجبي منه يا سودة بنت زمعة ". فلم تره سودة قط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2218
- Book Index
- 165
Grades
- -
