ஹதீஸ்கள்
#2215
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள ஒரு குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகைவாசலை அடைத்துக்கொண்டது. அப்போது அவர்கள் தமக்குள், ‘‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர். அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டுவருவேன். அவர்கள் அருந்து வார்கள். பிறகுதான் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். (இந்நிலையில்) ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. குழந்தைகள் (பால் கேட்டு) என் காலடியில் அழுது கூச்சலிட்டுக்கொண்டி ருந்தனர். வைகறைவரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக! நாங்கள் அதன் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே பாறை (சற்று) நகர்ந்தது. மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரருடைய புதல்வியரில் ஒருத்தியை, ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்புவதைவிட ஆழமாக விரும்பினேன். தனக்கு நான் நூறு பொற்காசுகள் கொடுக்காத வரை அவளை நான் அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். நான் உழைத்து நூறு பொற்காசுகளைத் திரட்டினேன். அவளுடைய இரு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே!› என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டுவிட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது அன்பை நாடியே நான் செய்திருப்பதாக நீ கருதியிருந்தால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே அவர்களைவிட்டு அல்லாஹ் (பாறையை) மூன்றில் இரு மடங்கு நகர்த்தினான். மற்றொருவர், ‘‘இறைவா! நான் ஒரு யிஃபரக்’ (மூன்று ‘ஸாஉ’கள்) தினையைக் கூலியாகப் பேசி, ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்த ஒரு யிஃபரக்’ தினையை நான் கவனமாகப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அவற்றின் மேய்ப்பரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!” என்றார். ‘‘(அதோ!) அந்த மாடுகள் மற்றும் அவற் றின் மேய்ப்பரிடம் செல் (எடுத்துக்கொள்.) அவை எல்லாம் உமக்குரியவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர், ‘‘என்னைக் கேலி செய்கிறீரா?” என்று கேட்டார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான்” எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது அன்பை நாடியே செய்திருப்பதாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை முற்றாக) அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். முழுமையாக அது அகற்றப்பட்டது.79 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابو عاصم، اخبرنا ابن جريج، قال اخبرني موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " خرج ثلاثة يمشون فاصابهم المطر، فدخلوا في غار في جبل، فانحطت عليهم صخرة. قال فقال بعضهم لبعض ادعوا الله بافضل عمل عملتموه. فقال احدهم اللهم، اني كان لي ابوان شيخان كبيران، فكنت اخرج فارعى، ثم اجيء فاحلب، فاجيء بالحلاب فاتي به ابوى فيشربان، ثم اسقي الصبية واهلي وامراتي، فاحتبست ليلة. فجيت فاذا هما نايمان قال فكرهت ان اوقظهما، والصبية يتضاغون عند رجلى، فلم يزل ذلك دابي ودابهما، حتى طلع الفجر اللهم ان كنت تعلم اني فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا فرجة نرى منها السماء. قال ففرج عنهم. وقال الاخر اللهم ان كنت تعلم اني كنت احب امراة من بنات عمي كاشد ما يحب الرجل النساء، فقالت لا تنال ذلك منها حتى تعطيها ماية دينار. فسعيت فيها حتى جمعتها، فلما قعدت بين رجليها قالت اتق الله، ولا تفض الخاتم الا بحقه. فقمت وتركتها، فان كنت تعلم اني فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا فرجة، قال ففرج عنهم الثلثين. وقال الاخر اللهم ان كنت تعلم اني استاجرت اجيرا بفرق من ذرة فاعطيته، وابى ذاك ان ياخذ، فعمدت الى ذلك الفرق، فزرعته حتى اشتريت منه بقرا وراعيها، ثم جاء فقال يا عبد الله اعطني حقي. فقلت انطلق الى تلك البقر وراعيها، فانها لك. فقال اتستهزي بي. قال فقلت ما استهزي بك ولكنها لك. اللهم ان كنت تعلم اني فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا. فكشف عنهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2215
- Book Index
- 162
Grades
- -
