ஹதீஸ்கள்
#2214
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு செல்வத்திலும் விலைக்கோள் உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பட்டிருந்தால், விலைக்கோள் உரிமை கிடையாது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிபிரிக்கப்படாத ஒவ்வொன்றி லும்’ என்றும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஒவ்வொரு பொருளிலும்’ என்றும் இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن محبوب، حدثنا عبد الواحد، حدثنا معمر، عن الزهري، عن ابي سلمة بن عبد الرحمن، عن جابر بن عبد الله رضى الله عنهما قال قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل مال لم يقسم، فاذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2214
- Book Index
- 160
Grades
- -
