ஹதீஸ்கள்
#2178
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ‘‘தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் (சரிக்குச் சமமாக மட்டுமே) விற்கலாம்!” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்களிடம் நான், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுவதில் லையே!” எனக் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் இ(வ்வாறு கூறிவருவ)தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர் களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவ்வா றெல்லாம் நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நன்கறிந்தவர்; என்றாலும், கடனில் (தவணையில்) தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார் என்று விடையளித்தார்கள்.63 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا الضحاك بن مخلد، حدثنا ابن جريج، قال اخبرني عمرو بن دينار، ان ابا صالح الزيات، اخبره انه، سمع ابا سعيد الخدري رضى الله عنه يقول الدينار بالدينار، والدرهم بالدرهم. فقلت له فان ابن عباس لا يقوله. فقال ابو سعيد سالته فقلت سمعته من النبي، صلى الله عليه وسلم، او وجدته في كتاب الله قال كل ذلك لا اقول، وانتم اعلم برسول الله صلى الله عليه وسلم مني، ولكنني اخبرني اسامة ان النبي صلى الله عليه وسلم قال " لا ربا الا في النسيية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2178
- Book Index
- 128
Grades
- -
