ஹதீஸ்கள்
#2176
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இதற்குமுன் 2174ஆவது ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் அறிவித்த) அந்த ஹதீஸைப் போன்று ஒரு ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் (ஒரு தடவை) அபூசயீத் (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிவித்த அந்த ஹதீஸ் என்ன? (திரும்பக் கூறுங்கள்)” என்று (உறுதிபடுத்திக் கொள்வதற்காகக்) கேட்டார்கள். அப்போது யிநாணயமாற்று’ தொடர்பாக அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘தங்கத்தை தங்கத்திற்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்); வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن سعد، حدثنا عمي، حدثنا ابن اخي الزهري، عن عمه، قال حدثني سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما ان ابا سعيد، حدثه مثل، ذلك حديثا عن رسول الله صلى الله عليه وسلم فلقيه عبد الله بن عمر فقال يا ابا سعيد، ما هذا الذي تحدث عن رسول الله صلى الله عليه وسلم فقال ابو سعيد في الصرف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الذهب بالذهب مثلا بمثل والورق بالورق مثلا بمثل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2176
- Book Index
- 126
Grades
- -
