ஹதீஸ்கள்
#2174
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நூறு பொற்காசுகளை (வெள்ளிக் காசுகளாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். நாங்கள் விலை குறித்துப் பேசினோம். இறுதியில் எனக்கு நாணயமாற்றுச் செய்ய அவர்கள் முன்வந்தார்கள். (என்னிடமிருந்து) பொற்காசுகளைப் பெற்று தமது கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு ‘அல்ஃகாபா’ எனும் இடத்திலிருந்து என் காசாளர் வரும்வரை (நீர் பொறுத்திருக்க வேண்டும்) என்றார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (என்னிடம்), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து (பொற்காசுகளுக்குப் பதிலாக வெள்ளிக் காசுகளைப்) பெறாமல் நீர் (இந்த இடத்தை விட்டுப்) பிரியக் கூடாது; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஉடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக்கொள்வது வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் என்று கூறியுள்ளார்கள்” என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن مالك بن اوس، اخبره انه التمس، صرفا بماية دينار، فدعاني طلحة بن عبيد الله فتراوضنا، حتى اصطرف مني، فاخذ الذهب يقلبها في يده، ثم قال حتى ياتي خازني من الغابة، وعمر يسمع ذلك، فقال والله لا تفارقه حتى تاخذ منه، قال رسول الله صلى الله عليه وسلم " الذهب بالذهب ربا الا هاء وهاء، والبر بالبر ربا الا هاء وهاء، والشعير بالشعير ربا الا هاء وهاء، والتمر بالتمر ربا الا هاء وهاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2174
- Book Index
- 124
Grades
- -
