ஹதீஸ்கள்
#2168
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா (ரலி) என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமை யாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் யிஊ(க்)கியா’ வீதம் (ஒன்பது ஆண்டுகளில்) ஒன்பது யிஊ(க்)கியா’க்கள் செலுத்தி (விடுதலை ஆகி)விடுவதென எழுதிக்கொடுத்துள் ளேன்; எனக்கு நீங்கள் உதவுங்கள்” என்றார். அதற்கு நான், ‘‘உன் வாரிசுரிமை (அல்வலாஉ) எனக்கே இருக்க வேண்டும் என்பதை உன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்கிறேன்” எனக் கூறினேன். உடனே, பரீரா தம் உரிமையாளர்களிடம் சென்றார். அவர்களி டம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் உரிமை யாளர்களிடமிருந்து திரும்பி வந்து, ‘‘விஷயத்தை உரிமையாளர்களிடம் கூறினேன்; அவர்கள் யிவாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்’ எனக் கூறி, மறுத்து விட்டனர்” என்று கூறினார். இதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொள்! யிவாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று அறிவித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்). ஏனெனில், (அடிமை இறந்தபின் அவனுக்கு) வாரிசாகும் உரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியது” எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்: இறை வாழ்த்துக்குப்பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த நிபந்தனையும் செல்லாதது ஆகும். அவை நூறு நிபந்தனைகளாயினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத் தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது. நிச்சயமாக, அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்த வருக்கே உரியது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت جاءتني بريرة فقالت كاتبت اهلي على تسع اواق في كل عام وقية، فاعينيني. فقلت ان احب اهلك ان اعدها لهم ويكون ولاوك لي فعلت. فذهبت بريرة الى اهلها، فقالت لهم فابوا عليها، فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس، فقالت اني قد عرضت ذلك عليهم فابوا، الا ان يكون الولاء لهم. فسمع النبي صلى الله عليه وسلم فاخبرت عايشة النبي صلى الله عليه وسلم فقال " خذيها واشترطي لهم الولاء، فانما الولاء لمن اعتق ". ففعلت عايشة ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس، فحمد الله واثنى عليه، ثم قال " اما بعد ما بال رجال يشترطون شروطا ليست في كتاب الله، ما كان من شرط ليس في كتاب الله فهو باطل وان كان ماية شرط، قضاء الله احق، وشرط الله اوثق، وانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2168
- Book Index
- 119
Grades
- -
