ஹதீஸ்கள்
#2156
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், (அடிமை யாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழு கைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பரீராவின் உரிமையாளர்கள், யிபரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் தவிர, அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமையின் (மரணத்திற்குப்பின் அவருக்கு) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத்தான் உரியது” எனக் கூறினார்கள்.55 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், யிஎனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا حسان بن ابي عباد، حدثنا همام، قال سمعت نافعا، يحدث عن عبد الله بن عمر رضى الله عنهما ان عايشة رضى الله عنها ساومت بريرة فخرج الى الصلاة، فلما جاء قالت انهم ابوا ان يبيعوها، الا ان يشترطوا الولاء. فقال النبي صلى الله عليه وسلم " انما الولاء لمن اعتق ". قلت لنافع حرا كان زوجها او عبدا فقال ما يدريني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2156
- Book Index
- 107
Grades
- -
