ஹதீஸ்கள்
#2155
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது தொடர்பான) விஷயத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்தபின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத்தான்” என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் ஆகும்” எனக் கூறி னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال عروة بن الزبير قالت عايشة رضى الله عنها دخل على رسول الله صلى الله عليه وسلم فذكرت له، فقال رسول الله صلى الله عليه وسلم " اشتري واعتقي، فان الولاء لمن اعتق ". ثم قام النبي صلى الله عليه وسلم من العشي، فاثنى على الله بما هو اهله، ثم قال " ما بال اناس يشترطون شروطا ليس في كتاب الله، من اشترط شرطا ليس في كتاب الله فهو باطل، وان اشترط ماية شرط، شرط الله احق واوثق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2155
- Book Index
- 106
Grades
- -
