ஹதீஸ்கள்
#2153
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது: ‘‘மணமுடிக்காத ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு கயிற்றுக்காவது விற்று விடுங்கள்” என்றார்கள். ‘‘மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா; அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابي هريرة، وزيد بن خالد رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم سيل عن الامة اذا زنت ولم تحصن قال " ان زنت فاجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم ان زنت فبيعوها ولو بضفير ". قال ابن شهاب لا ادري بعد الثالثة، او الرابعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2153
- Book Index
- 105
Grades
- -
