ஹதீஸ்கள்
#2150
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங் காதீர்கள்!53 ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி (விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காகவே) விலை கேட்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால், அந்த ஆட்டை (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். இவ்விரண்டில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تلقوا الركبان، ولا يبيع بعضكم على بيع بعض ولا تناجشوا ولا يبيع حاضر لباد، ولا تصروا الغنم، ومن ابتاعها فهو بخير النظرين بعد ان يحتلبها ان رضيها امسكها، وان سخطها ردها وصاعا من تمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2150
- Book Index
- 102
Grades
- -
