ஹதீஸ்கள்
#2148
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற் றின் பாலைக் கறக்காமல் விட்டு வைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணி களை வாங்கியவர், விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக்கொள்ள லாம்; விரும்பாவிட்டால் (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் சிறந்த ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளி லிருந்து) மூன்று நாட்கள் வரையில்தான்!” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வேறுசில அறிவிப்புகளில், யிஒரு ஸாஉ பேரீச்சம்பழம்’ என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே காணப்படுகிறது. மூன்று நாட்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆக, யிபேரீச்சம் பழத்தின் ஒரு ஸாஉ’ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا ابن بكير، حدثنا الليث، عن جعفر بن ربيعة، عن الاعرج، قال ابو هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم " لا تصروا الابل والغنم، فمن ابتاعها بعد فانه بخير النظرين بعد ان يحتلبها ان شاء امسك، وان شاء ردها وصاع تمر ". ويذكر عن ابي صالح ومجاهد والوليد بن رباح وموسى بن يسار عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم " صاع تمر ". وقال بعضهم عن ابن سيرين صاعا من طعام وهو بالخيار ثلاثا. وقال بعضهم عن ابن سيرين صاعا من تمر. ولم يذكر ثلاثا، والتمر اكثر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2148
- Book Index
- 100
Grades
- -
