ஹதீஸ்கள்
#2134
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், ‘‘(என்னிடமுள்ள தங்கத்திற்குப் பதிலாக) யாரிடமாவது வெள்ளிக் காசுகள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் இருக்கிறது; ஆனால், (நாணய மதிப்பைக் கணிக்க) யிஃகாபா’ எனும் இடத்திலிருந்து எம் காசாளர் வந்தபிறகே தருவேன்” என்றார்கள். அப்போது (அங்கிருந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்: உடனுக்குடன் அல்லாமல் (தவணையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல், தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.43 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்டு ம”மிட்டுள் ளோம்; அதில் கூடுதல் தகவல் இல்லை (எனவே, ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் சரியானதுதான்). அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، كان عمرو بن دينار يحدثه عن الزهري، عن مالك بن اوس، انه قال من عنده صرف فقال طلحة انا حتى يجيء خازننا من الغابة. قال سفيان هو الذي حفظناه من الزهري ليس فيه زيادة. فقال اخبرني مالك بن اوس سمع عمر بن الخطاب رضى الله عنه يخبر عن رسول الله صلى الله عليه وسلم قال " الذهب بالذهب ربا الا هاء وهاء، والبر بالبر ربا الا هاء وهاء، والتمر بالتمر ربا الا هاء وهاء، والشعير بالشعير ربا الا هاء وهاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2134
- Book Index
- 86
Grades
- -
