ஹதீஸ்கள்
#2132
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட் டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உணவுப் பொருள் (அதை வாங்கியவரின் கைக்குப்) போய்ச்சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.42 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் யிவந்து சேராதது’ என்பதைக் குறிக்க யிமுர்ஜஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் இதன் பன்மையான) யிமுர்ஜஊ” (முர்ஜவ்ன) எனும் சொல் (9:106) ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிதாமதத்தில் (காத்திருப்பில்) வைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، عن ابن طاوس، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم نهى ان يبيع الرجل طعاما حتى يستوفيه. قلت لابن عباس كيف ذاك قال ذاك دراهم بدراهم والطعام مرجا. قال ابو عبد الله مرجيون موخرون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2132
- Book Index
- 84
Grades
- -
