ஹதீஸ்கள்
#2127
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடன் உள்ள நிலையில் இறந்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள், அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நான் நாடினேன். அவ்வாறே, நபி (ஸல்) அவர்களும் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) அவர்களிடம் கோரினார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் ‘அஜ்வா’ எனும் (உயர்) ரகத்தைத் தனியாகவும் யிஇப்னு ஸைத்’ எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக!” என்றார்கள். அவ்வாறே நான் செய்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப் பினேன். அவர்கள் வந்து அதன் மேற் புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தாருக்கு அளந்து கொடுப்பீராக!” என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாததைப் போன்று அப்படியே எஞ்சியிருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஃபிராஸ் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவர்களுக்கு (முழுமை யாக) கடனை அடைக்கும்வரை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘கடன் கொடுத்தவருக்காக (பேரீச்சம் பாளையைத்) தனியாகப் பிரித்து, முழுமையாகக் கொடுத்துவிடு” என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا جرير، عن مغيرة، عن الشعبي، عن جابر رضى الله عنه قال توفي عبد الله بن عمرو بن حرام، وعليه دين فاستعنت النبي صلى الله عليه وسلم على غرمايه ان يضعوا من دينه، فطلب النبي صلى الله عليه وسلم اليهم، فلم يفعلوا، فقال لي النبي صلى الله عليه وسلم " اذهب فصنف تمرك اصنافا، العجوة على حدة، وعذق زيد على حدة، ثم ارسل الى ". ففعلت، ثم ارسلت الى النبي صلى الله عليه وسلم فجلس على اعلاه، او في وسطه ثم قال " كل للقوم ". فكلتهم حتى اوفيتهم الذي لهم، وبقي تمري، كانه لم ينقص منه شىء. وقال فراس عن الشعبي حدثني جابر عن النبي صلى الله عليه وسلم، فما زال يكيل لهم حتى اداه، وقال هشام عن وهب عن جابر قال النبي صلى الله عليه وسلم " جذ له فاوف له
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2127
- Book Index
- 79
Grades
- -
