ஹதீஸ்கள்
#2122
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அபூஹுரைரா அத்தவ்சி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் வேளையில் புறப்பட்டார்கள். (நானும் சென்றேன்.) அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேச வில்லை. யிபனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந் தார்கள். ‘‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?” என்று (பேரர் ஹசன் (ரலி) அவர்கள் குறித்துக்) கேட்டார் கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக்கொண்டிருக்கிறார்; அல்லது மகனை நீராட்டிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன் (ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘‘இறைவா! இவரை நீ நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ஒரு ரக்அத் யிவித்ர்’ தொழுததை நான் பார்த்தேன். (இதிலிருந்து அவரை இவர் சந்தித்துள்ளார் என அறியலாம்.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2122
- Book Index
- 75
Grades
- -