ஹதீஸ்கள்
#2119
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது, அவர் தமது கடைத்தெருவிலோ வீட்டிலோ (தனியாகத்) தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் அங்கத் தூய்மை செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்லவைக்கவில்லை. இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது. மேலும், உங்களில் ஒருவர், தாம் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றனர். அங்கே, அவருக்கு அங்கத் தூய்மை கலையாமல் இருக்கும்வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யா மலிருக்கும்வரை, ‘‘இறைவா! இவருக்குக் கருணை செய்வாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக் காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " صلاة احدكم في جماعة تزيد على صلاته في سوقه وبيته بضعا وعشرين درجة، وذلك بانه اذا توضا فاحسن الوضوء، ثم اتى المسجد، لا يريد الا الصلاة، لا ينهزه الا الصلاة، لم يخط خطوة الا رفع بها درجة، او حطت عنه بها خطيية، والملايكة تصلي على احدكم ما دام في مصلاه الذي يصلي فيه اللهم صل عليه، اللهم ارحمه، ما لم يحدث فيه، ما لم يوذ فيه ". وقال " احدكم في صلاة ما كانت الصلاة تحبسه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2119
- Book Index
- 72
Grades
- -
