ஹதீஸ்கள்
#2118
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; யிபைதாஉ’ எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (உயிருடன்) பூமிக்குள் புதையுண்டுபோவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை எவ்வாறு புதை யுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதி களும் இருக்குமே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (எல்லாரும்) புதையுண்டுபோகத்தான் செய்வார்கள்; எனினும், (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن الصباح، حدثنا اسماعيل بن زكرياء، عن محمد بن سوقة، عن نافع بن جبير بن مطعم، قال حدثتني عايشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم " يغزو جيش الكعبة، فاذا كانوا ببيداء من الارض يخسف باولهم واخرهم ". قالت قلت يا رسول الله كيف يخسف باولهم واخرهم، وفيهم اسواقهم ومن ليس منهم. قال " يخسف باولهم واخرهم، ثم يبعثون على نياتهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2118
- Book Index
- 71
Grades
- -
