ஹதீஸ்கள்
#2099
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸின் கூட்டாளி ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினார் கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று ‘‘அந்த ஒட்டகத்தை நாம் விற்று விட்டோம்” என்றார். நவ்வாஸ் ‘‘யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘யிஇன்ன இன்ன தன்மை உடைய பெரிய வரிடம் விற்றேன்” என்றார். அதற்கு நவ்வாஸ் ‘‘உமக்குக் கேடுதான்! அல்லாஹ் வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். ‘‘என் கூட்டாளி, அடங்காத் தாகமுள்ள (நோயாளி) ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீ ராக!” என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அதை விட்டுவிடுவீராக! யிதொற்று நோய் கிடையாது!› என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் முழுமனதுடன் ஏற்கிறேன். (இந்த நோயுள்ள ஒட்டகத்தால் என் ஏனைய ஒட்டகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது)” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال عمرو كان ها هنا رجل اسمه نواس، وكانت عنده ابل هيم، فذهب ابن عمر رضى الله عنهما فاشترى تلك الابل من شريك له، فجاء اليه شريكه فقال بعنا تلك الابل. فقال ممن بعتها قال من شيخ، كذا وكذا. فقال ويحك ذاك والله ابن عمر. فجاءه فقال ان شريكي باعك ابلا هيما، ولم يعرفك. قال فاستقها. قال فلما ذهب يستاقها فقال دعها، رضينا بقضاء رسول الله صلى الله عليه وسلم لا عدوى. سمع سفيان عمرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2099
- Book Index
- 52
Grades
- -
