ஹதீஸ்கள்
#2098
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அந்த இடங்களில் வணிகம் செய்வது பாவம் என்று மக்கள் கருதினர். அப்போதுதான் அல்லாஹ், ‘‘உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமன்று” (2:198) எனும் வசனத்தை அருளினான். அதாவது ஹஜ் காலங்களில் (குற்ற மன்று). இவ்வாறே (ஹஜ் காலங்களில் லி ஃபீ மவாசிமில் ஹஜ் என்பதையும் சேர்த்தே) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை ஓதினார்கள் என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.24 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو، عن ابن عباس رضى الله عنهما قال كانت عكاظ ومجنة وذو المجاز اسواقا في الجاهلية، فلما كان الاسلام تاثموا من التجارة فيها، فانزل الله {ليس عليكم جناح} في مواسم الحج، قرا ابن عباس كذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2098
- Book Index
- 51
Grades
- -
