ஹதீஸ்கள்
#2097
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘ஜாபிரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்றேன். ‘‘என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். ‘‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு ‘‘(ஒட்டகத்தில்) ஏறு!” என்றார்கள். நான் ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். ‘‘கன்னி கழிந்த பெண்ணைத்தான்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந் திருக்கலாமே!” என்று கூறினார்கள். நான், ‘‘எனக்குச் சகோதரிகள் உள்ளனர்; அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்; ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக! புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக!” என்று கூறிவிட்டு பின்னர், ‘‘உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘சரி” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் யிஊக்கியா’ விலை பேசி அதை என்னிட மிருந்து வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வரும்வரை என் ஒட்டகத்திலேயே நான் பயணித்தேன்.) பிறகு எனக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். ‘‘இப்போதுதான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழு தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடைபோடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!” என்று (அங்கிருந்தவரிடம்) கூறினார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என்னிடம் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب، حدثنا عبيد الله، عن وهب بن كيسان، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم في غزاة، فابطا بي جملي واعيا، فاتى على النبي صلى الله عليه وسلم فقال " جابر ". فقلت نعم. قال " ما شانك ". قلت ابطا على جملي واعيا، فتخلفت. فنزل يحجنه بمحجنه، ثم قال " اركب ". فركبت، فلقد رايته اكفه عن رسول الله صلى الله عليه وسلم قال " تزوجت ". قلت نعم. قال " بكرا ام ثيبا ". قلت بل ثيبا. قال " افلا جارية تلاعبها وتلاعبك ". قلت ان لي اخوات، فاحببت ان اتزوج امراة تجمعهن، وتمشطهن، وتقوم عليهن. قال " اما انك قادم، فاذا قدمت فالكيس الكيس ". ثم قال " اتبيع جملك ". قلت نعم. فاشتراه مني باوقية، ثم قدم رسول الله صلى الله عليه وسلم قبلي، وقدمت بالغداة، فجينا الى المسجد، فوجدته على باب المسجد، قال " الان قدمت ". قلت نعم. قال " فدع جملك، فادخل فصل ركعتين ". فدخلت فصليت، فامر بلالا ان يزن له اوقية. فوزن لي بلال، فارجح في الميزان، فانطلقت حتى وليت فقال " ادع لي جابرا ". قلت الان يرد على الجمل، ولم يكن شىء ابغض الى منه. قال " خذ جملك ولك ثمنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2097
- Book Index
- 50
Grades
- -
