ஹதீஸ்கள்
#2093
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்” எனக் கூறிவிட்டு, ‘‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம்! அது ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வைதான்” என்று கூறப்பட்டது. (தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அப்பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நானே என் கையால் நெய்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றுக்கொண்டார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதைக் கீழாடையாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, சபையில் (சிறிது நேரம்) அமர்ந்திருந்தார் கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து, அதைச் சுருட்டி (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், ‘‘நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங் கையாக திருப்பியனுப்பமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே!” எனக் கூறினர். அதற்கு அம்மனிதர், ‘‘நான் இறக்கும் நாளில் அது எனக்குச் சவக்கோடியாக (கஃபன்) ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்” என்றார். அது அவ்வாறே, அவரது கஃபனாக ஆனது.21 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا يعقوب بن عبد الرحمن، عن ابي حازم، قال سمعت سهل بن سعد رضى الله عنه قال جاءت امراة ببردة قال اتدرون ما البردة فقيل له نعم، هي الشملة، منسوج في حاشيتها قالت يا رسول الله، اني نسجت هذه بيدي اكسوكها. فاخذها النبي صلى الله عليه وسلم محتاجا اليها. فخرج الينا وانها ازاره. فقال رجل من القوم يا رسول الله، اكسنيها، فقال " نعم ". فجلس النبي صلى الله عليه وسلم في المجلس، ثم رجع فطواها، ثم ارسل بها اليه. فقال له القوم ما احسنت، سالتها اياه، لقد علمت انه لا يرد سايلا. فقال الرجل والله ما سالته الا لتكون كفني يوم اموت. قال سهل فكانت كفنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2093
- Book Index
- 46
Grades
- -
