ஹதீஸ்கள்
#2091
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். (இணைவைப்பாள ரான) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அப்போது அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்கு (திருப்பி)த்தரமாட்டேன்”’என்றார். நான், ‘‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படாத வரை நான் (முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அதற்கு அவர் ‘‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் அடைத்துவிடுகிறேன்” என்றார். அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துக்கொண்டு ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) அளவற்ற அருளாள(னான இறைவ)னிடம் உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா? (19 :77, 78) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن سليمان، عن ابي الضحى، عن مسروق، عن خباب، قال كنت قينا في الجاهلية، وكان لي على العاص بن وايل دين، فاتيته اتقاضاه قال لا اعطيك حتى تكفر بمحمد صلى الله عليه وسلم. فقلت لا اكفر حتى يميتك الله، ثم تبعث. قال دعني حتى اموت وابعث، فساوتى مالا وولدا فاقضيك فنزلت {افرايت الذي كفر باياتنا وقال لاوتين مالا وولدا * اطلع الغيب ام اتخذ عند الرحمن عهدا}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2091
- Book Index
- 44
Grades
- -
