ஹதீஸ்கள்
#2042
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்” என்று கூறினார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது நேர்ச்சையை நிறை வேற்றுவீராக!” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் ஓர் இரவு இஃதிகாஃப் இருந்தார்கள்.5 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، عن اخيه، عن سليمان، عن عبيد الله بن عمر، عن نافع، عن عبد الله بن عمر، عن عمر بن الخطاب رضى الله عنه انه قال يا رسول الله اني نذرت في الجاهلية ان اعتكف ليلة في المسجد الحرام. فقال له النبي صلى الله عليه وسلم " اوف نذرك ". فاعتكف ليلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2042
- Book Index
- 17
Grades
- -
