ஹதீஸ்கள்
#2041
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹு தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு (ஒருமுறை) நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக்கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) அவர்கள் மற்றொரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு, ‘‘இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வாறு அவர்கள் செய்வதற்குக் காரணம் நற்செயல் புரியும் எண்ணமா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்” என்று கூறினார்கள். உடனே அவை அகற்றப் பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا محمد بن فضيل بن غزوان، عن يحيى بن سعيد، عن عمرة بنت عبد الرحمن، عن عايشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان، واذا صلى الغداة دخل مكانه الذي اعتكف فيه قال فاستاذنته عايشة ان تعتكف فاذن لها فضربت فيه قبة، فسمعت بها حفصة، فضربت قبة، وسمعت زينب بها، فضربت قبة اخرى، فلما انصرف رسول الله صلى الله عليه وسلم من الغد ابصر اربع قباب، فقال " ما هذا ". فاخبر خبرهن، فقال " ما حملهن على هذا البر انزعوها فلا اراها ". فنزعت، فلم يعتكف في رمضان حتى اعتكف في اخر العشر من شوال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2041
- Book Index
- 16
Grades
- -
