ஹதீஸ்கள்
#2039
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
அலீ பின் அல்ஹுசைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (பேசிவிட்டுத்) திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி (ஸல்) அவர்களும் நடந்தார்கள். அப்போது அவர்களை அன்சாரிகளில் ஒருவர் கூர்ந்து பார்த்தார். அவர் கூர்ந்து பார்த்த தும் அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, ‘‘இங்கே வாரும்! அவர் லிஅல்லது இவர்லி (என் மனைவி) ஸஃபிய்யாதான்! நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மகனின் (மனிதனின்) ரத்த நாளங்களில் ஓடுகிறான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இரவு நேரத்திலா நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்?” என்று நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘இரவில்லாமல் வேறென்ன?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال اخبرني اخي، عن سليمان، عن محمد بن ابي عتيق، عن ابن شهاب، عن علي بن الحسين رضى الله عنهما ان صفية، اخبرته. حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال سمعت الزهري، يخبر عن علي بن الحسين، ان صفية رضى الله عنها اتت النبي صلى الله عليه وسلم وهو معتكف، فلما رجعت مشى معها، فابصره رجل من الانصار، فلما ابصره دعاه فقال " تعال هي صفية وربما قال سفيان هذه صفية فان الشيطان يجري من ابن ادم مجرى الدم ". قلت لسفيان اتته ليلا قال وهل هو الا ليل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2039
- Book Index
- 14
Grades
- -
