ஹதீஸ்கள்
#2038
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களிடம் அவர்களின் துணைவியர் (சிலர்) இருந்தார் கள். பிறகு (இல்லங்களுக்குத்) திரும்பி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்சாரிகளில் இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவானோ என நான் அஞ்சினேன்” என்று கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عبد الرحمن بن خالد، عن ابن شهاب، عن علي بن الحسين رضى الله عنهما ان صفية، زوج النبي صلى الله عليه وسلم اخبرته. حدثنا عبد الله بن محمد حدثنا هشام اخبرنا معمر عن الزهري عن علي بن الحسين كان النبي صلى الله عليه وسلم في المسجد، وعنده ازواجه، فرحن، فقال لصفية بنت حيى " لا تعجلي حتى انصرف معك ". وكان بيتها في دار اسامة، فخرج النبي صلى الله عليه وسلم معها، فلقيه رجلان من الانصار، فنظرا الى النبي صلى الله عليه وسلم ثم اجازا وقال لهما النبي صلى الله عليه وسلم " تعاليا، انها صفية بنت حيى ". قالا سبحان الله يا رسول الله. قال " ان الشيطان يجري من الانسان مجرى الدم، واني خشيت ان يلقي في انفسكما شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2038
- Book Index
- 13
Grades
- -
