ஹதீஸ்கள்
#2036
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா?” என்று அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆம்! நாங்கள் ரமளானின் நடுப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறக்க வைக்கப்பட்டுவிட்டேன். எனவே, அதை இறுதிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் சஜ்தா செய்வதைப் போன்று கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதி காஃப் இருந்தாரோ அவர் பள்ளிவாசலுக் குத் திரும்பட்டும்” எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிவாசலுக்குத் திரும்பி னார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்தார்கள். அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை நான் கண்டேன். அத்தியாயம் :
حدثني عبد الله بن منير، سمع هارون بن اسماعيل، حدثنا علي بن المبارك، قال حدثني يحيى بن ابي كثير، قال سمعت ابا سلمة بن عبد الرحمن، قال سالت ابا سعيد الخدري رضى الله عنه قلت هل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر ليلة القدر قال نعم، اعتكفنا مع رسول الله صلى الله عليه وسلم العشر الاوسط من رمضان قال فخرجنا صبيحة عشرين، قال فخطبنا رسول الله صلى الله عليه وسلم صبيحة عشرين فقال " اني اريت ليلة القدر، واني نسيتها، فالتمسوها في العشر الاواخر في وتر، فاني رايت اني اسجد في ماء وطين، ومن كان اعتكف مع رسول الله صلى الله عليه وسلم فليرجع ". فرجع الناس الى المسجد، وما نرى في السماء قزعة قال فجاءت سحابة فمطرت، واقيمت الصلاة، فسجد رسول الله صلى الله عليه وسلم في الطين والماء، حتى رايت الطين في ارنبته وجبهته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2036
- Book Index
- 11
Grades
- -
