ஹதீஸ்கள்
#2035
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக் கும் பெரிய விஷயமாகப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني علي بن الحسين رضى الله عنهما ان صفية، زوج النبي صلى الله عليه وسلم اخبرته انها جاءت رسول الله صلى الله عليه وسلم تزوره في اعتكافه في المسجد، في العشر الاواخر من رمضان، فتحدثت عنده ساعة، ثم قامت تنقلب، فقام النبي صلى الله عليه وسلم معها يقلبها، حتى اذا بلغت باب المسجد عند باب ام سلمة مر رجلان من الانصار، فسلما على رسول الله صلى الله عليه وسلم فقال لهما النبي صلى الله عليه وسلم " على رسلكما انما هي صفية بنت حيى ". فقالا سبحان الله يا رسول الله. وكبر عليهما. فقال النبي صلى الله عليه وسلم " ان الشيطان يبلغ من الانسان مبلغ الدم، واني خشيت ان يقذف في قلوبكما شييا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2035
- Book Index
- 10
Grades
- -
