ஹதீஸ்கள்
#2033
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்களுக்காக நான் (பள்ளிவாசலில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன்; சுப்ஹு தொழுதுவிட்டு அதற்குள் அவர்கள் நுழைந்துவிடு வார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள், என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பார்த்த போது, அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளிவாசலுக்குள் பல கூடாரங்களைக் கண்டு, ‘‘இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، حدثنا يحيى، عن عمرة، عن عايشة رضى الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الاواخر من رمضان، فكنت اضرب له خباء فيصلي الصبح ثم يدخله، فاستاذنت حفصة عايشة ان تضرب خباء فاذنت لها، فضربت خباء، فلما راته زينب ابنة جحش ضربت خباء اخر، فلما اصبح النبي صلى الله عليه وسلم راى الاخبية فقال " ما هذا ". فاخبر فقال النبي صلى الله عليه وسلم " البر ترون بهن ". فترك الاعتكاف ذلك الشهر، ثم اعتكف عشرا من شوال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2033
- Book Index
- 8
Grades
- -
