ஹதீஸ்கள்
#2027
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். அதன்படி ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் லிஅந்த இரவின் காலையில்தான் இஃதி காஃபிலிருந்து வெளியேறுவார்கள்லி ‘‘யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப் பட்டது; பின்னர் அது எனக்கு மறக்க வைக்கப்பட்டுவிட்டது. (அந்தக் கனவில்) அந்த இரவின் காலையில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் இறுதிப் பத்து நாட்களில் தேடிக்கொள்ளுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலை யால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹு தொழுகை யில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரு கண்களும் பார்த்தன. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن يزيد بن عبد الله بن الهاد، عن محمد بن ابراهيم بن الحارث التيمي، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي سعيد الخدري رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الاوسط من رمضان، فاعتكف عاما حتى اذا كان ليلة احدى وعشرين، وهي الليلة التي يخرج من صبيحتها من اعتكافه قال " من كان اعتكف معي فليعتكف العشر الاواخر، وقد اريت هذه الليلة ثم انسيتها، وقد رايتني اسجد في ماء وطين من صبيحتها، فالتمسوها في العشر الاواخر، والتمسوها في كل وتر ". فمطرت السماء تلك الليلة، وكان المسجد على عريش فوكف المسجد، فبصرت عيناى رسول الله صلى الله عليه وسلم على جبهته اثر الماء والطين، من صبح احدى وعشرين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2027
- Book Index
- 3
Grades
- -
