ஹதீஸ்கள்
#2023
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Night of Qadr
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘லைலத்துல் கத்ர்' பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டி ருந்தனர். (அவர்களைத் தடுக்கச் சென்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சண்டையிட்டுக்கொண்டிருந்த னர்; எனவே, அது (பற்றிய விளக்கம்) அகற்றப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத் தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடிக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا خالد بن الحارث، حدثنا حميد، حدثنا انس، عن عبادة بن الصامت، قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر، فتلاحى رجلان من المسلمين، فقال " خرجت لاخبركم بليلة القدر، فتلاحى فلان وفلان، فرفعت، وعسى ان يكون خيرا لكم، فالتمسوها في التاسعة والسابعة والخامسة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Night of Qadr
- Hadith Index
- #2023
- Book Index
- 10
Grades
- -
