ஹதீஸ்கள்
#2018
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Night of Qadr
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப் பகுதியில் உள்ள பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி ஒரு மாதத்தில் ‘இஃதிகாஃப்' இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (வழக்கமாக இல்லம்) திரும்பும் இரவில் (இல்லம் திரும்பாமல் பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அல்லாஹ் நாடிய விஷயங் களை அவர்களுக்குக் கட்டளையிட் டார்கள். பின்னர், ‘‘நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப் பட்டது: பின்னர் அது எனக்கு மறக்க வைக்கப்பட்டது; எனவே, (ரமளானின்) இறுதிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுங்கள்! (அந்த நாட்களிலுள்ள) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன்” எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் (இரைச்சலுடன்) மழை பொழிய, பள்ளிவாசல் (கூரை ‘லிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن حمزة، قال حدثني ابن ابي حازم، والدراوردي، عن يزيد، عن محمد بن ابراهيم، عن ابي سلمة، عن ابي سعيد الخدري رضى الله عنه . كان رسول الله صلى الله عليه وسلم يجاور في رمضان العشر التي في وسط الشهر، فاذا كان حين يمسي من عشرين ليلة تمضي، ويستقبل احدى وعشرين، رجع الى مسكنه ورجع من كان يجاور معه. وانه اقام في شهر جاور فيه الليلة التي كان يرجع فيها، فخطب الناس، فامرهم ما شاء الله، ثم قال " كنت اجاور هذه العشر، ثم قد بدا لي ان اجاور هذه العشر الاواخر، فمن كان اعتكف معي فليثبت في معتكفه، وقد اريت هذه الليلة ثم انسيتها فابتغوها في العشر الاواخر وابتغوها في كل وتر، وقد رايتني اسجد في ماء وطين ". فاستهلت السماء في تلك الليلة، فامطرت، فوكف المسجد في مصلى النبي صلى الله عليه وسلم ليلة احدى وعشرين، فبصرت عيني رسول الله صلى الله عليه وسلم ونظرت اليه انصرف من الصبح، ووجهه ممتلي طينا وماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Night of Qadr
- Hadith Index
- #2018
- Book Index
- 5
Grades
- -
