ஹதீஸ்கள்
#1870
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of Madinah
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (நாம் படிக்கின்ற நூல்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை. (இந்த ஏட்டில் உள்ளதாவது): “ஆயிர் (அய்ர்) என்ற மலையிலிருந்து இன்ன இடம் (‘ஸவ்ர்’ அல்லது ‘உஹுத்’)வரை மதீனா புனித மானதாகும்;3 இதில் யாரேனும் (மார்க்கத் தில் இல்லாத) ஒன்றைப் புதிதாக ஏற்படுத் தினால், அல்லது அவ்வாறு ஏற்படுத்துப வருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் அவன்மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ அவனிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் யார் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானது) ஆகும். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த) உரிமையாளர்களின் அனுமதியின்றி, வேறொருவரைத் தன் உரிமையாளர் என்று கூறினால், அவன்மீதும் அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கூடுதலான வழிபாடு என்பதைக் குறிக்கும்) ‘அத்ல்’ எனும் சொல்லுக்கு, இங்கு ‘பரிகாரம்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، عن علي رضى الله عنه قال ما عندنا شىء الا كتاب الله، وهذه الصحيفة عن النبي صلى الله عليه وسلم " المدينة حرم، ما بين عاير الى كذا، من احدث فيها حدثا، او اوى محدثا، فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل ". وقال " ذمة المسلمين واحدة، فمن اخفر مسلما فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل، ومن تولى قوما بغير اذن مواليه، فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of Madinah
- Hadith Index
- #1870
- Book Index
- 4
Grades
- -
