ஹதீஸ்கள்
#1857
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். -அப்போது நான் பருவ வயதை நெருங் கிக்கொண்டிருந்தேன்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது. அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا يعقوب بن ابراهيم، حدثنا ابن اخي ابن شهاب، عن عمه، اخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، ان عبد الله بن عباس رضى الله عنهما قال اقبلت وقد ناهزت الحلم، اسير على اتان لي، ورسول الله صلى الله عليه وسلم قايم يصلي بمنى، حتى سرت بين يدى بعض الصف الاول، ثم نزلت عنها فرتعت، فصففت مع الناس وراء رسول الله صلى الله عليه وسلم. وقال يونس عن ابن شهاب بمنى في حجة الوداع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1857
- Book Index
- 37
Grades
- -
