ஹதீஸ்கள்
#1850
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்தி லிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு நறுமணம் பூசாதீர்கள். இவரது தலையை மூடாதீர்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை ‘தல்பியா’ கூறிக்கொண்டிருப்பவராக எழுப்புவான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال بينا رجل واقف مع النبي صلى الله عليه وسلم بعرفة اذ وقع عن راحلته فوقصته او قال فاوقصته فقال النبي صلى الله عليه وسلم " اغسلوه بماء وسدر، وكفنوه في ثوبين، ولا تمسوه طيبا، ولا تخمروا راسه، ولا تحنطوه، فان الله يبعثه يوم القيامة ملبيا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1850
- Book Index
- 30
Grades
- -
