ஹதீஸ்கள்
#1847
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற அடையாளம் உள்ள மேலங்கியை அவர் அணிந்திருந்தார். “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்று பின்னர் அது அவர்களைவிட்டு விலகியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது ஹஜ்ஜில் செய்யக்கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள். ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இழுத்தபோது) கடித்தவரது முன்பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا همام، حدثنا عطاء، قال حدثني صفوان بن يعلى، عن ابيه، قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فاتاه رجل عليه جبة فيه اثر صفرة او نحوه، وكان عمر يقول لي تحب اذا نزل عليه الوحى ان تراه فنزل عليه ثم سري عنه فقال " اصنع في عمرتك ما تصنع في حجك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1847
- Book Index
- 27
Grades
- -
