ஹதீஸ்கள்
#1842
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(முழு நீளச்) சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை கள், (முக்காடுள்ள) மேலங்கிகள், குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்! ஆயினும், கணுக் காலுக்குக் கீழே இருக்கும்படி அவற்றைக் கத்தரித்துக்கொள்ளட்டும்!” என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن سالم، عن عبد الله رضى الله عنه سيل رسول الله صلى الله عليه وسلم ما يلبس المحرم من الثياب فقال " لا يلبس القميص، ولا العمايم، ولا السراويلات، ولا البرنس، ولا ثوبا مسه زعفران ولا ورس، وان لم يجد نعلين فليلبس الخفين، وليقطعهما حتى يكونا اسفل من الكعبين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1842
- Book Index
- 22
Grades
- -
