ஹதீஸ்கள்
#1824
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது (என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அக்கழுதைகளைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக் கும் நிலையில் வேட்டையாடப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச் சியை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் இறங்கி, அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட பிராணியின் மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக்கொண்டோம்: பிறகு, எஞ்சிய இறைச்சியை எடுத்துவந்திருக் கிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். “அப்படி யானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1824
- Book Index
- 4
Grades
- -