ஹதீஸ்கள்
#1823
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள ‘அல்காஹா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; இஹ்ராம் கட்டாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப் பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று .கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர் ஒரு பாறாங் கல்லுக்கு அப்பாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதை வெட்டினேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டுவந்தேன். சிலர் “உண்ணுங்கள்” என்றனர். வேறுசிலர் “உண்ணாதீர்கள்” என்றனர். எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை உண்ணுங்கள். அது அனுமதிக்கப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதை நமக்கு அறிவித்த) ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் இங்குதான் (மக்காவுக்கு) வந்துள்ளார்கள். அவரிடம் சென்று இதுபோன்ற விஷயங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، حدثنا صالح بن كيسان، عن ابي محمد، نافع مولى ابي قتادة سمع ابا قتادة رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بالقاحة من المدينة على ثلاث ح. وحدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا صالح بن كيسان عن ابي محمد عن ابي قتادة رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بالقاحة، ومنا المحرم، ومنا غير المحرم، فرايت اصحابي يتراءون شييا فنظرت، فاذا حمار وحش يعني وقع سوطه فقالوا لا نعينك عليه بشىء، انا محرمون. فتناولته فاخذته، ثم اتيت الحمار من وراء اكمة، فعقرته، فاتيت به اصحابي، فقال بعضهم كلوا. وقال بعضهم لا تاكلوا. فاتيت النبي صلى الله عليه وسلم وهو امامنا، فسالته فقال " كلوه حلال ". قال لنا عمرو اذهبوا الى صالح فسلوه عن هذا وغيره، وقدم علينا ها هنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1823
- Book Index
- 3
Grades
- -
